தொழில் முனைவோர்களுக்கான STARTUP WEEKEND நிகழ்வு கிளிநொச்சியில்!

Techstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் கடந்த  ஜூன் 24ம் திகதி  தொடக்கம் 26ம்திகதி வரை யாழ் ரில்கோ விடுதியில்  நடாத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இரண்டாவது நிகழ்வு கடந்த ஒக்டோபர் 6ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. அடுத்த 3வது நிகழ்வான Startup Weekend Vanni நிகழ்வு கிளிநொச்சியில் டிசம்பர்  16ம் திகதி  தொடக்கம் 18ம் திகதி வரை யாழ்பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியில் பீட வளாகத்தில் நடைபெற உள்ளது.

swvanni

இது தொடர்பில் ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் மொழியிலான கேள்வி பதில் விளக்கம் வருமாறு.

1)Startup என்றால்?
புதிதான ஒரு வணிக ரீதியான எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தல்
 
2)Startup Weekend என்பது?
Techstars அமைப்பினால் 3 நாள் நிகழ்வாக உலகளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படுகின்ற Startup களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு
 
3)யார் இந்த Techstar ?
Startup களில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான நிதிவளங்களை பெறுபவதற்கு உதவுதல் , அவர்களுக்கு தேவையான வசதிகள் வல்லுனர் உதவிகளை ஒருங்கிணைத்துக்கொடுத்தல் . Startup களினை மேலும் அபிவிருத்தி செய்தல் முன்னேற்ற வேகத்தினை அதிகரித்தல் ஆகிய செயற்பாடுகளை செய்பவர்கள். அவர்கள் Google For Entrepreneurs அமைப்பின் பங்காளிகள்.
 
4)Startup Weekend நிகழ்வில் என்ன நடைபெறும் ?
1ம் நாள் (5.30pm -10pm)
கலந்துகொள்பவர்களிடம் இருந்து வாய்மொழி எண்ண முன்மொழிவுகள் பெறப்படும். பங்குபற்றுபவர்கள் தங்கள் சொந்த மொழியில் கருத்திடடங்களை முன்மொழியலாம்.
அவற்றில் கலந்து கொண்டுள்ளவர்களின் வாக்குகளுக்கு அமைய சிறந்த 10-15 Startup முன்மொழிவுகள் தெரிவு செய்யப்படும்.கலந்து கொள்பவர்கள் குழுக்களாக பிரிக்கப்படுவர். பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு விரும்பிய குழுங்களில் இணைந்துகொள்ளும் வாய்பினை பெறுவர். ஒவ்வொரு குழுவுக்கும் குறைந்தது ஒவ்வொரு நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்கள் குழுக்களுக்கான உரிய உதவிகளை வழங்குவார்கள்
 
2ம்நாள் (9am -10pm)
ஒவ்வொரு குழுக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட Startup முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது அபிவிருத்தி செய்வது செய்து முடிப்பது என்பது தொடர்பில் திட்டங்களை தயாரிப்பர்.மிகக்குறைந்த அளவிலான நிலை வரை Startup மூலம் கொண்டுவரப்படவுள்ள வெளியீடு குறித்து மாதிரியை தயாரிப்பர். அதன்போது குழுவில் உள்ள ஒவ்வொரு தரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் உதவியினை வழங்குவர்  3ம் நாள் மாலை வரை அது தொடரும்
 
3ம் நாள் மாலை (9am -9pm)
அனைத்து குழுவினரும் தங்கள் Startup திட்டங்கள் தொடர்பில் 3 பேர் கொண்ட நடுவர்கள் மத்தியில் Presentation வழங்குவார்கள். இவர்களில் 3 குழு தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்படும்.மேலதிக உதவிகள் Techstar இனால் வழங்கப்படும். விருது பெறும் Startup கள் Startup Acceleration திட்டத்திற்கு தகுதிபெறும். ஏனைவவை மேம்படுத்தப்படுவதற்கான வாய்புக்கள் கிடைக்கும்
 
5) Startup Weekend வன்னி
கிளிநொச்சியில்  எதிர்வரும் டிசம்பர்  16ம் திகதி  தொடக்கம் 18ம்  திகதி வரை யாழ்பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியில் பீட வளாகத்தில் நடைபெற உள்ளது.
 
6)யார் கலந்துகொள்கின்றார்கள்?
இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஏனைய துறை தொழில் முனைவோர் முதலீட்டாளர் தொழில்நுட்பவியலாளர் மாணவர் என சகலதுறைகளில் இருந்தும் 100 பேர்வரையில் கலந்துகொள்வர்.முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் கலந்துகொள்வர். வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் 3 தொழில் முனைவோர் வல்லுனர்களின் பேச்சுக்களும் இடம்பெறும் .
 
7)நீ்ங்களும் கலந்து கொள்ளலாமா?
ஆம் தகவல் புதிய வணிக சிந்தனைகள் உங்கள் மனத்தில் ஓடுகின்றதா? அதற்கு செயல் வடிவம் கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றீர்களா? எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோராக விரும்புகின்றீர்களா? ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலென்ன ஈடுபட்டிராவிட்டாலென்ன தயக்கம் தேவையில்லை கலந்து கொள்ளலாம்.உங்களிடம் கருத்திட்டம் இல்லா விடினும் ஏனையவர்களின் கருத்திட்டத்தில் ஒரு குழுவில் இணைந்து பங்காற்றும் உங்கள் அனுபவ அறிவை பகிரந்துகொள்ள தயாரானவராயின் தயக்கம் வேணடாம். வெற்றிகரமான Startup ஒன்றின் குழுப்பங்காளராக இருப்பது உங்களுக்கு நன்மையே. 
 
8)கலந்து கொள்ள கட்டணம் உண்டா?
நிச்சயமாக கட்டணம் உண்டு. 3 நாட்கள் விடுதியில் நிகழ்வை சிறப்பான முறையில் நடாத்துவதற்கும் அங்கு அனைவருக்கும் தேனீர் , சிற்றுண்டிகள், மதிய , இரவு உணவு வழங்குவதற்கும் செலவு உண்டல்லவா எனவே அவற்றினை கருத்தில் கட்டணம் உண்டு. தங்குமிட வசதி வழங்கப்படும். 
 
9) கட்டணம் எவ்வளவு?
 நுழைவுச்சீட்டுக்கள் தற்போது இணைய வழி விற்பனையாகிறது.மாணவர்களுக்கு மட்டும் இலவசம் .
10)பங்குபற்றுபவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
  1. Startup ஒன்றினை  ஆரம்பிக்க சந்தர்ப்பம்.
    பல்வேறுதரப்பட்ட துறைசார்தவர்களுடன் குழுவாக பணியாற்றும் அனுபவம்
    தொழில்முனைவோருடையான தொடர்புகள்
  2. புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு
  3. உலகளாவிய தொழில்முனைவோர் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்தல்
  4. முன்னணி Startup களுக்கு முதலீட்டாளர்களின் முதலீட்டு வசதிகள்
  5. அனுசரணை நிறுவனங்களின் சலுகைகள்

அனுசரணையாளர்கள்
ICTA , NCIT, SLASSCOM ,FITIS , 99XTechnologies, Seylan Bank,
TamilMirror , Shoutout

மேலதிக தகவல்கள்
https://www.facebook.com/StartupWeekendLK

Tel : 0777 563213 / 077 222 2559

Advertisement