புதிய தொழில்நுட்ப தொழில் முனைவுகளுக்கான Spiralation நிகழ்ச்சித்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவராண்மை(ICTA)  நிறுவனத்தினால் புதிய தொழில்நுட்ப தொழில் முனைவுகளுக்கான  பங்கு முதலீடு (Seed Fund)  பெற்றுக்கொடுப்பதற்கான வருடாந்த  Spiralation நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

Spiralation என்றால் என்ன?

Spiralation முயற்சி ஆனது புதிய தொழில்நுட்பம் சார்ந்த சவால் மிகுந்த தொழில் முனைப்புக்ளுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்துகின்றது. இந்த செயற்திட்டமானது தொழில்நுட்பம் சார்ந்த புதிய தொழில் முனைவு முயற்சிகளையும், தங்களது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வணிக திட்டங்களில் மேம்பாடுகளுக்கான தேவையினை கொண்டிருக்கும் வளர்ந்து வரும் சுய தொழில் முனைவோரை இலக்காக கொண்டது.

புதிய வகையான புத்தாக்கம் கொண்டதான சிறந்த தொழில்நுட்ப திட்டங்களுக்கு (Start up) அவர்களின் திட்டத்திற்குரிய செலவின் 75 வீதத்தை முதலீடாக பெற்றுக்கொ்ள்ளக்கூடிய வாய்ப்பினை இது வழங்குகின்றது. இதன்மூலம் ஒரு வணிகத்திட்டம் பெறக்கூடிய ஆகக்கூடிய தொகை ரூபா 10 லட்சமாகும். அதேவேளை தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகள் சிறப்பு ஆலோசனைகள் வழிகாட்டல்கள் ,திறன்விருத்தி பயிற்சிகள் உள்ளுர் மற்றும் சர்வதேச ஊக்குவிப்புக்களை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

புதிய தொழில் முனைவுகளும்(Start-ups) (பதிவுசெய்யப்பட்டவை அல்லது பதிவு செய்யப்பட உள்ளவை) 2வருடத்திற்குக்குறைவான பதிவு காலப்பகுதியை கொண்ட நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணம்பிக்கும் குழு அல்லது நிறுவனம் குறைந்தது 3 இயக்குனர்களை அல்லது 3 முன்னிலை செயற்பாட்டாளர்களை கொண்டிருக்கவேண்டும் .அதேவேளை நிறுவனத்தின் அல்லது குழுவின் பணியாளர்கள் 10 இற்கு மேற்படாமலும் இருக்கவேண்டும்.

பொதுவான தகவல்கள்

அனைத்து விண்ணப்பங்களும் குறிப்பிடப்பட்ட வடிவத்தில் இருக்கவேண்டும். பகுதியாகவன்றி முழுமையாக பூரணப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். சமர்ப்பிக்க முன்பாக அறிவுறுத்தல்களை பின்பற்றியிருக்கவேண்டும். முறையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டமையானது விண்ணப்பம் தெரிவுசெய்யப்பட்டதாக கொள்ளப்பட முடியாது. திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில்தான் தெரிவுகள் இடம்பெறும்.

அறிவுறுத்தல்கள்

1. அனைத்து தகவல்களும் உண்மையானதாகவும் நேர்த்தியானதாகவும் இருக்கவேண்டும். தவறாக இருப்பின் நிராகரிக்கப்படும்.

2.மொழிநடை இலகுவானதாகவும் குழப்பமற்றதாகவும் இருக்கவேண்டும்

3.சகல விண்ணப்பங்களும் spiralation@icta.lk மற்றும் icta.spiralation@gmail.com ஆகிய மின்னஞ்சல்களுக்கு 28 பெப்ரவரி 2017 அன்றோ முன்னதாகவே கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கப்படவேண்டும்.

4. கையெழுத்து மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது

5.தொலைநகல் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

6.தீவிர பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு உயர் புள்ளிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு பங்கு முதலீடுகள் வழங்கப்படும்.ICTA யின் விருது வழங்கும் குழுவின் முடிவே இறுதியானதாகும்

7.தெரிவு செய்யப்பட்ட தொழில் முனைவு முன்மொழிவுகள் நிறுவன பதிவு செய்யப்படாவிடில் பதிவுசெய்ய கோரப்படும்.செய்யப்பட்ட வேலைகள் தொடர்ச்சியாக திட்டமிடடப்பட்டுள்ள வேலைகளின் கால அட்டவணைகளுடனான அறிக்ககைகள் யாவும் ICTA யின் அறிவுறுத்தல்களுக்கமைவாக கோரப்படும். குறிப்பிட்ட கால அட்டவணைக்கான பங்கு முதலீட்டு வழங்குகைகள் அவ்வவ் காலப்பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட செயற்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு உறுதிப்படுத்தியதன் பின்னர் வழங்கப்படும்

8. மேலதிக விபரங்களை http://www.facebook.com/spiralation. இல் பெறலாம்

விண்ணப்ப படிவங்களை
https://spiralation.com/apply-for-spiralation/ இல் பதிவு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். முடிவுத்திகதி 28 பெப்ரவரி 2017

Advertisement