வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்கும் PIN less Payment

தற்போது   எல்லா நிறுவனங்களும்   வரிசையில் நிற்கும் நேரத்தை குறைத்து வேகமானதும் திருப்திகரமானதுமான சேவையை வழங்க எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு    முயல்கின்றன

அந்த வகையில் ஒரு இடத்தில் போய் பொருட்களை கொள்வனவு செய்து விட்டு கொடுப்பனவு செய்வதற்காக   வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்க அறிமுகப்படுத்திய இலத்திரனியல் பணம் செலுத்தும் முறைதான்   தான் “PIN less Payment ” முறை .அதாவது இரகசிய இலக்கம் (PIN)  இன்றிய பணம் செலுத்தும் முறை இது.

இந்த முறை மூலம் குறிப்பிட்ட தொகைக்குள்  கொள்வனவு செய்தவர்கள்  தங்கள் பணம் செலுத்தும் அட்டையினை இயந்திரத்தில்(Card Reading Machine)  ) செருக தேவையில்ல . அட்டையினை  இயந்திரத்தில் தொடுகை (Touching) செய்வதன் மூலம் கொடுப்பனவை மேற்கொள்ளலாம் . இதன்போது எந்தவித மேலதிக கேள்விகளும் இன்றி உரிய கட்டணப்பட்டியலுக்கான (Bill) கொடுப்பவு செலுத்தப்படும்  . PIN less Payment  முறையில் பணம் செலுத்துவதற்கான எல்லை  வங்கிகளுக்கு வங்கி மாறுபடும் .

கொள்வனவு அட்டைகளை வழங்கும் வங்கிகள் தாங்கள் வழங்கும் அட்டையில்  Wifi மூலம் வேலை செய்ய கூடிய தொழில் நுட்பத்தை சேர்த்து வழங்குகின்றன . ஆரம்பத்தில் அறிமுக படுத்தும் போது வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு மட்டும் வழங்கினர் . ஆனால் தற்பொழுது எல்லோருக்கும் கொடுக்கிறார்கள்

இந்த அட்டை தொலைந்தால் உடனடியாக வங்கிக்கு அறிவிக்க வேண்டும் . இல்லை எனில் அதை எடுப்பவர் இரகசிய இலக்கம் (PIN) இல்லாமலே அந்த அட்டை மூலம்  கொடுப்பனவுகளை  செய்யலாம் . வங்கிக்கு அறிவிக்கும் பட்சத்தில் வங்கி  குறித்த அட்டையினை நிறுத்தி வைக்கும்  அல்லது அதற்கிடையில் அது பயன்படுத்த பட்டு இருந்தால் அதற்குரிய இழப்பீட்டை வழங்கும்

எப்படியாயினும் தொடர்ந்து ஒரே நாளில் திரும்ப திரும்ப “PIN less Payment ” முறையில் அந்த அட்டை  பயன்படுத்த பட்டால் அதை வங்கி தானாகவே தடுக்கும் அல்லது உரிமையாளரிடம் தொடர்பை ஏற்படுத்தும்

கிட்டத்தட்ட இதே முறையில் அறிமுக படுத்தப்பட்டிருப்பது தான் திறன்பேசிகள் ஊடான கொடுப்பனவு முறை(Smart phone payment Method) . Apple ,Samsung போன்ற   திறன்பேசிகள் (ஸ்மார்ட் போன்) மூலம் நாம் கொடுப்பனவுகளை செலுத்தலாம் . கொடுப்பனவு அட்டைகளின் விபரங்களை ஏற்கனவே இதில் நாங்கள் கொடுத்து வைக்க வேண்டும் . இயந்திரத்தில் போனை தொடுகை செய்தால் போதும் கொடுப்பனவு நிறைவேற்றப்படும். அதற்கு  முதல் iPhone போன் என்றால் கை விரல் அடையாள பாதுகாப்பு கேட்கும் .

கொடுப்பனவு  செய்யும் இடத்தில் வந்து இயந்திரத்தில் அட்டையினை இழுத்துசில வினாடி பொறுத்து இரகசிய இலக்கம் கொடுத்து பின்னர் ஒரு சில வினாடிகள் பொறுத்து  பற்றுச்சீட்டு எடுக்கும் நேரத்தை குறைப்பதற்காகவே  இதையெல்லாம்  செய்தார்கள் .

குறைக்கும் அந்த விநாடிகளில் இன்னும் கூட வாடிக்கையாளர்களை உள் வாங்கலாம் என்று அவர்கள்  நினைக்கின்றார்கள் . அது உண்மை தான்
முன்னர் ஒரு மணித்தியாலத்தில் வரும் வாடிக்கையாளரை விட 10 வாடிக்கையாளராவது கூட வருகின்றார்கள் என்கிறார்  லண்டனில்  இந்த வசதி கொண்ட விற்பனை நிலையம் ஒன்றின் விற்பனையாளர்.

பதிவு மூலம் சிவரதன்

Advertisement