தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்காட்சியும் தொழிற்துறையினருக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மேம்பாடு செயலமர்வும்

ICTA அனுசரணையில் CCIY யின் ஒத்துழைப்பில் NCIT யினால் ஒழுங்கு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ள மேற்படி நிகழ்வில் இணையம் , மென்பொருள், இணைய வடிவமைப்பு , மொபைல் அப்ஸ், இலத்திரனியல் தகவல் பாதுகாப்பு , நெற்வேக்கிங் , இலத்திரனியல் சந்தைப்படுத்தல் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் அதுதொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் நிறுவனங்கள் தமது சேவைகளையும் தீர்வுகளையும் காட்சிப்படுத்துகின்றன.

அத்துடன் மேற்படி விடயங்கள் தொடர்பில் உங்கள் வியாபாரத்தினை மேம்படுத்துவது தொடர்பிலான வல்லுனர்கள் வழங்கும் அறிவூட்டல் செயலமர்வும் இடம்பெறவுள்ளது

காலை அமர்வில் சிறிய நடுத்தர தொழிற்துறையில் மின்வணிக மேம்பாடும் இலத்திரனியல் சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்களும் என்ற தலைப்பில் யாழ்பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் துறை விரிவுரையாளர் கலாநிதி சிவானி அவர்களின் கருத்துரையும்

மாலை அமர்வில் சிறிய நடுத்தர தொழிற்துறையில்  இலத்திரனியல் மேம்பாடு என்ற தலைப்பில், யாழ்பல்கலைக்கழக கணினிவிஞ்ஞான துறை விரிவுரையாளர் திரு சர்வேஸ்வரன் அவர்களின் கருத்துரையும் இடம்பெறும்

கண்காட்சியில் சிறீலங்கா ரெலிகொம் மற்றும் மொபிட்டல் நிறுவனங்களின் விசேட விற்பனைக்காட்சிக்கூடங்களும் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம் மற்றும் வடக்கு தகவல்தொழில் நுட்ப சம்மேளனம் ஆகியன அழைப்பு விடுத்துள்ளன

திகதி : 31.05.2017 நேரம் : காலை 9 மணி – மாலை 4 மணி இடம்: வலம்புரி விருந்தினர் விடுதி (4ம் மாடி),யாழ்ப்பாணம் மேலதிக தகவல்களுக்கு :021 222 6609 / 0777 563144 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் அழைப்பை ஏற்படுத்தலாம். பங்குபெற விரும்பும் தொழிற்துறைசார்ந்தவர்கள்   சுய தொழில் முயற்சியாளர்கள் தொழில்தொடங்க ஆர்வமாயுள்ளவர்கள் தொலைபேசி மூலமாகவோ இணையவழியிலோ முன்பதிவு செய்து பங்குபற்ற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது

இணையவழி முன்பதிவு செய்ய https://goo.gl/K9CF6y

Advertisement