ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான ஊக்கியாக ICTA இனால் DISRUPT ASIA 2017 அறிமுகம்

இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பினால்(ICTA), Disrupt Asia 2017 கண்காட்சி மற்றும் மாநாடு அறிமுகம் செய்யப்படவுள்ளமை ஜுலை 12ம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு Trace Expert City யில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற ‘Disrupt Asia’ நிகழ்வைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் நிகழ்ச்சியினூடாக தொழில்முயற்சியாண்மை கட்டமைப்பை வளர்ச்சியடையச் செய்வது, புதுப்பிப்பது மற்றும் மீளமைப்பது போன்றவற்றை முன்னெடுக்க ICTA எதிர்பார்த்துள்ளது. இந்த மாநாட்டில் முன்னணி பேச்சாளர்கள், அறிவுரையாளர்கள்; மற்றும் முதலீட்டாளர்கள் போன்றோர் பங்கேற்று புத்தாக்கமான ஆரம்ப நிலை நிறுவனங்களை வெளிப்படுத்துவார்கள்.

இந்நிகழ்வு மேலும், பங்குபற்றுநர்களை உயர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்முயற்சியாளர்களுடனும், சிந்தனை தலைவர்கள், கட்டமைப்பு பங்காளர்களுடன் வலையமைப்பை ஏற்படுத்தி, அறிவை பெற்று துறையில் நேர்த்தியான தாக்கத்தை உண்டு பண்ண கூடியவர்களாக திகழச் செய்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த மாநாட்டில்; ICTA இன் பங்காக, ஆரம்ப நிலை கட்டமைப்பை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்பதாக அமைந்திருப்பதுடன், இதனூடாக தொழில்முயற்சியாளர்கள் நிலையான நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதனூடாக அறிவை பரிமாற்றிக் கொள்ளவும், இளம் தலைமுறையினரிடையே இலகுவாக சென்றடையக்கூடிய திறனை வழங்கும் வகையிலும் அமைந்திருக்கும்.

ICTA வின் தலைமை அதிகாரி சித்ராங்கனி முபாரக் கருத்து தெரிவிக்கையில், “தொழில்முயற்சியாண்மை நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளன. அவற்றினால் முன்வைக்கப்படும் புத்தாக்கங்கள் மட்டுமின்றி, அவற்றினால் உருவாக்கப்படும் புதிய தொழில் வாய்ப்புகளும் இதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. வுpயாபார சூழலுக்கு அவை போட்டிகரமான கட்டமைப்புகளையும் வழங்கக்கூடியன. இது நடந்தேறுவதற்கு எம்மத்தியில், அடக்கமான, துரித கதியில் இயங்கக்கூடிய ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய கட்டமைப்பு ஒன்று காணப்பட வேண்டும். இதற்கு Disrupt Asia மூலமாக சிறந்த அடித்தளம் வழங்கப்படுவதுடன், தொழில்நுட்ப தொழில்முயற்சியாளர்கள், முதலீட்டாளர்கள், அறிவுரையாளர்கள், கொள்கை திட்டமிடுநர்கள் மற்றும் ஊடகங்கள் ஆகிய வெவ்வேறு தரப்பினரை ஒன்றிணைக்கும் ஒரே களமாக இது அமைந்துள்ளது. இந்த மாநாட்டை முன்னெடுப்பதையிட்டு ICTA மகிழ்ச்சியடைகிறது” என்றார்.

பெருமளவான உயர் தொழில்நுட்ப திறன் கொண்ட நிறுவனங்கள் சிலிக்கன் வெலி பகுதியிலிருந்து உருவாக்கம் பெற்றிருந்த போதிலும், தற்போது உலகளாவிய ரீதியில் இந்தத்துறையில் தொழில்முயற்சியாண்மை பரந்து வியாபித்துக் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

உயர் தொழில்நுட்ப ஆரம்ப நிலை நிறுவனங்கள், புதிய தகவல் பொருளாதாரத்தில் பிரதான வளர்ச்சிபடியாக அமைந்திருப்பதாக கருதப்படுவதுடன், ஆசியா அடங்கலாக உலகளாவிய ரீதியில் ஆரம்பநிலை நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றமை, எதிர்காலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் முக்கிய பங்கை ஆற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில், ஆரம்ப நிலை நிறுவனங்கள் சிறியளவில் காணப்பட்ட போதிலும், பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கங்கள் மற்றும் போட்டிகரத்தன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கக்கூடிய நிலையில் காணப்படுகின்றன. சுpல சந்தர்ப்பங்களில் சர்வதேச மட்டத்திலும் தமது பங்களிப்பை வழங்கக்கூடியதாக அமைந்துள்ளன.

வெற்றிகரமாக இயங்கும் ஆரம்ப நிலை நிறுவனங்கள், வளர்ச்சி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாக காணப்படுவதுடன், இலங்கையின் ஆரம்பநிலை நிறுவனங்கள் கட்டமைப்பு உறுதியானதாக அமைந்துள்ளன. அண்மையில் ICTA வினால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்த செயற்பாடுகளினூடாக, ‘The Global Startup Ecosystem Report 2017’ அறிக்கையில் முதன் முறையாக அதன் நாமத்தை பதிவு செய்ய ஏதுவாக அமைந்திருந்தது. Startup Genome இனால் வெளியிடப்படும் இந்த அறிக்கை, உலகளாவிய ரீதியில் காணப்படும் ஆரம்ப நிலை நிறுவனங்கள் தொடர்பில் பரிபூரணமாக ஆராய்ந்து பிராந்தியங்களில் எவ்வாறான சூழல்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் ஆய்வு அறிக்கைகளை பிரசுரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

உலகளாவிய ரீதியில் காணப்படும் இளம் ஆரம்ப நிலை நிறுவனங்கள் வரிசையில் இலங்கையையும் இந்த அறிக்கை குறிப்பிட்டிருந்த போதிலும், இந்த நிலையை மேலும் மேம்படுத்துவதற்கான ICTA இனால் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன.

2010ம் ஆண்டு முதல் ICTA வின் Spiralation Tech Startup Support நிகழ்ச்சியினூடாக seed funding, market access, mentoring, training மற்றும் தொழில்முயற்சியாண்மை தொடர்பில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு நிதிஉதவிகளை வழங்கும் நிகழ்ச்சியினூடாக 40க்கும் அதிகமான நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன. இதில் EimSky, eTenders.lk, HypeHash, SenzMate மற்றும் PayMedia போன்றன அடங்கியுள்ளன.

ICTA வின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முகுந்தன் கனகே கருத்துத் தெரிவிக்கையில், “எதிர்காலத்துக்கு வழியமைத்துக் கொடுக்கும் வகையில் இன்றைய புத்தாக்க செயற்பாட்டாளர்கள் இயங்கி வருகின்றனர், இவர்கள் புத்தாக்கமான தொழில்நுட்ப அப்ளிகேஷன்களை வடிவமைப்பதுடன், சரியான பார்வையாளர்கள், சிந்தனைத்தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்காளர்கள் போன்றோருக்கு அந்த தீர்வுகள்
சென்றடைவதற்கான பெறுமதியான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. இவர்களினால் இந்த தீர்வுகளை உலகளாவிய மட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும். ICTA வைச் சேர்ந்த நாம் எமது தொழில் முயற்சியாளர்களுக்கு பொருத்தமான சாதனங்களை வழங்கக்கூடிய சூழலை ஏற்படுத்தவும், அவர்களுக்கு அவசியமான ஊக்குவிப்பை வழங்கியும் வருகிறோம்” என்றார்.

Disrupt Asia 2017 நிகழ்வுக்கு Edulink International Campus உதவி பங்காளராக அனுசரணை வழங்க முன்வந்துள்ளதுடன், Startup Battle பங்காளராக Hemas Slingshot, Workspace பங்காளராக Business Hubs மற்றும் Investor Forum பங்காளராக CrowdIsland ஆகியன கைகோர்த்துள்ளன.

ICTA பற்றி: ICTA நிறுவனமானது, 2003 ஆம் ஆண்டு இலக்கம் 27 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டம் மூலம் அமைக்கப்பட்ட ஓர் அரசாங்க முகவர் நிலையமாகும். இலங்கை அரசின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கைகளை மற்றும் திட்டங்களை அமுல்படுத்த இந்நிறுவனம் ஆணை பெற்றுள்ளது. ICTA நிறுவனமானது தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் ஓர் நிறுவனமாகும்.

Disrupt Asia பற்றிய மேலதிக விபரங்களுக்கு www.disruptasia.today அணுகவும்.

Advertisement