16 ஆவது தமிழிணைய மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன

Out West

உலகத் தமிழ் தகவல்  தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 16வது தமிழிணைய மாநாடு 2017, கனடொவில்  தொரொண்டோ (Toronto) மாநகரில், தொரொண்டடொ பல்கலக்கழக சுகொர்படரொ (Scarborough) வளாகத்தில் ஆகத்து மாதம் 25-27 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது

இக்கருத்தரங்கு வொட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பாங்கு அறிதிறன் இயந்திர அறிவுத்திறனுக்கான நடுவத்தின் ஆதரவோடும், தொரொண்டடோ பல்கலைக்கழகம், சுகொர்படரொவின் ஆதரவோடும் நடைபெறுகின்றது. தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாண்டு மாநாட்டுக்கருத்தரங்கில் ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning) என்பதும் தமிழில் தரவு அறிவியல் (Data Science) என்பதுமாக இரண்டு கருத்து முழக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை ஏ-4 (A4) தாள் அளவில் இரண்டு பக்கங்களில் ஏப்பிரல் 15 திகதிக்குள்  cpc2017@infitt.org என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளது. கட்டுரைச் சுருக்கமானது குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பத் திட்டப்பணியைப் பற்றிய முக்கியத் தகவல்கள் ஆய்வு முறைகள் ஆய்வடிப்படையில் கண்ட முடிவுகள் ஆகியவற்றைத் தெளிவாகக் கொண்டிருக்க வேண்டும். தலைப்பை அறிமுகம் செய்யும் பொதுவான கட்டுரைச் சுருக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

ஆய்வுச்சுருக்கம் அனுப்ப கடைசி நாள் ஏப்ரல் 15

மேலதிக தகவல்களுக்கு http://home.infitt.org/

Advertisement