விண்வெளி நிலையத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு போலியானது!

ISS சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணில் இயங்கி வருகிறது. பூமியில் இருந்து செல்லும் விஞ்ஞானிகள், அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு திரும்பி வருகின்றனர். தொடர்ச்சியாக இது போல் விஞ்ஞானிகள் சென்று வருகின்றனர்.

தற்போது  இந்த நிலையத்தில் இருந்து  Face Book வழியாக  நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக UNILAD என்ற முகப்புத்தக பக்கம் காணொளி வெளியிட்டுகொண்டிருக்கின்றது   விண்வெளி நிலையத்தையும் வெளியே காணப்படுபவனவற்றையும் இந்த ஒளிபரப்பு காட்டுவதாக அது அமைகின்றது. இது போலியானது என தெரிய வந்துள்ளது.

நாசாவின்  உத்தியோக பூர்வ பக்கத்தில் எந்தவித செய்திகளும் அதுபற்றி இல்லை. அத்துடன் தாம் விண்வெளி நடத்தல் செயற்பாட்டினை இன்று மேற்கொள்ளவி்ல்லை என  நாசா கூறியுள்ளதாக நாசா அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி  செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

முகப்புத்தகம் அண்மையில் Facebook Live என்ற வசதியினை ஏற்படுத்தியதன் பின் பெரும்பாலான பயனர்கள் அந்த சேவையினை பயன்படுத்தி நேரடி ஒளிபரப்பு காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர் இந்த வகையில்  இந்தக்காணொளி    பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதில் உள்ள வியப்பு என்னவெனில் நேரலை நிறுத்தப்படாமல் தொடர்ச்சியாக தெளிவாக செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றமைதான்.

அத்துடன் குறித்த காணொளி 2013 இல் வெளியான காணொளியினை ஒத்ததாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுவரை  மேற்குறித்த UNILAD பக்கத்தில் உள்ள காணொளியினை 17 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர் 1 மில்லியன் பேர் விரும்பியுள்ளனர் 2 லட்சத்துக்கும் அதிகமான பகிர்வுகளை அது கொண்டிருக்கின்றது.தற்போது வேறுசில பக்கங்களும் இவ்வாறு போலி  நேரடி ஒளிபரப்புக்களை செய்கின்றன.

2013 இல் வெளிவந்த     காணொளி  இதோ

இந்தக்காணொளியும்  தற்போதைய நேரடி ஒளிபரப்பும் ஒத்திருக்கின்றது.
பூமியிலிருந்து 350 கி. மீ., தொலைவுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள ISS எனப்படும்   நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பேஸ்புக்கில் நேரடியாக தெளிவாக தொடர்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்படுவது சாத்தியற்றது என்றே தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த யூன் 1ம் திகதி முகப்புத்தக நிறுவனர் மார்க் விண்வெளி வீரர்களுடன் நேரடியாக கலந்துரையாடிய நிகழ்வு இடம்பெற்றதும் அது முகப்புத்தகம் ஊடாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. அதன்பின்னரே இவ்வகையான காணொளி ஒளிபரப்பப்படுவதால் பயனர்களை மிக இலகுவாக நம்பவைக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது

மோசடியான நேரடி ஒளிபரப்பு  இணைப்பு இதோ

https://www.facebook.com/uniladmag/videos/2430165973673114/

இதனை பல இணையத்தளங்கள் தொழில்நுட்ப புரட்சி என்று புகழ்ந்து செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த செய்தி தொடர்பில் NEWTECH.news  குழு ஆய்வு செய்ததிலேயே இந்த உண்மை தெரியவந்ததால் வாசகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்

”எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”

Advertisement