”மொபைல் போன்” பயன்படுத்த மோடி தடை

அமைச்சரவை கூட்டத்தின் போது மொபைல் போன்பயன்படுத்த பிரதமர் மோடி தடை விதித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தின் போது முக்கிய தகவல்கள் கசிவதை தடுக்கவும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் அலுவலக உத்தரவின் அடிப்படையில், மத்திய அமைச்சரவை செயலகம் இது தொடர்பான உத்தரவை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், அமைச்சரவை மற்றும் அமைச்சரவை குழு கூட்டத்தின் போது ஸ்மார்ட் மற்றும் மொபைல்போன்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றியும் இதற்கான காரணம் பற்றியும், அமைச்சர்களிடம் தனிச்செயலாளர்கள் விளக்கி கூற வேண்டும் என அமைச்சரவை செயலாளர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

சைபர் அச்சுறுத்தல்:
சர்ஜிக்கல் தாக்குதலை தொடர்ந்து, இந்த சாதனங்களை பாகிஸ்தான் அல்லது சீனாவை சேர்ந்தவர்கள் முடக்கலாம் என உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து, பல முக்கியமான துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களது மொபைல்போன்களை அலுவலக கம்ப்யூட்டர்களுடன் இணைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சார்ஜ் செய்யவும் கூட இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு உள்ளிட்ட சவுத் பிளாக்கில் உள்ள பகுதிகளில் ஸ்மார்ட் போன்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

Advertisement