பெர்முடா முக்கோணத்தின் மர்மம் நீங்கியது

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா முக்கோணத்திற்கு அருகே செல்லும் விமானங்கள் மட்டும் கப்பல்கள் எவ்வாறு காணாமல் போகின்றன என்ற மர்மத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 5,00,000 சதுரடி பரப்பளவில் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ளது.இது Florida, Puerto Rico மற்றும் Bermuda ஆகிய பகுதிகளுக்கு இடையே ஒரு முக்கோண வடிவில் காணப்படுகிறது.


Video Courtesy: Sciencechannel.com

இந்த கடற்பரப்பின் மீது செல்லும் கப்பல்களும், இதற்கு மேல் பறக்கும் விமானங்களும் திடீரென மாயமாக காணாமல் போவது விஞ்ஞானிகளை பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தி வந்துள்ளது.பல ஆண்டுகளாக இதற்கு விடையும் கிடைக்காத நிலையில், அமெரிக்காவில் உள்ள Colorado பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க தீவிர ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இது குறித்து ஸ்டீவன் மில்லர் என்ற ஆராய்ச்சியாளர் பேசியபோது, ‘பெர்முடா முக்கோணப்பகுதியில் நிகழும் மர்மத்திற்கு அங்குள்ள மோசமான காலநிலை தான் காரணம்’ எனக்கூறியுள்ளார்.அதாவது, பெர்முடா முக்கோணப்பகுதிக்கு மேல் உள்ள மேகங்கள் தான் விமானங்களும், கப்பல்களும் காணாமல் போவதற்கு காரணம்.

ராடார் கருவையை வைத்து நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தபோது, சுமார் 20 முதல் 55 கி.மீ தூரம் பரப்பளவு உள்ள இந்த மேகங்கள் ‘வெடிகுண்டு சூறாவளி காற்றை’ உற்பத்தி செய்கிறது.

மேகங்களில் உருவாகும் இந்த காற்று மணிக்கு சுமார் 170 கி.மீ வேகத்தில் கீழ்நோக்கி பாய்ந்து கடற்பரப்பு மீது மோதுகிறது.இதுபோன்ற ஒரு சூழலில் இந்த இடைப்பட்ட தூரத்தில் விமானம் பறந்தால், அதனை இந்த காற்று மிகவும் எளிதாக அழுத்திச்சென்று கடலில் மூழ்கடித்து விடும்.

காற்று கடற்பரப்பின் மீது வேகமாக மோதும்போது சுமார் 45 அடி உயரத்திற்கு அலை எழுவதால் அவ்வழியாக செல்லும் கப்பலுக்கும் இதே நிலை தான் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

மேலதிக வாசிப்புக்கு Sciencealert

Advertisement