புதிய வரவான PayHere இணையவழி பணம்செலுத்தும் சேவை செயலிழப்பு!

இலங்கையில் மின்வணிக நடவடிக்கையில்  புதிய வரவான   PayHere இணையவழி பணம்செலுத்தும் சேவை கடந்த 2 வாரங்களாக செயலிழந்துள்ளது.  இலங்கையில் Paypal இற்கு மாற்றீடாக கொண்டாடப்பட்ட இந்த இணைய வழி பணப்பரிமாற்ற சேவை கடந்த 3 மாதகாலமாக சிறப்பாக இயங்கி வந்தது. நிறைய மின்வணிக தளங்களும் வணிக சேவைகளும் இந்த பணப்பரிமாற்ற சேவையினை தங்கள் தளங்களில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இது தொடர்பில் PayHere நிறுவனம் வாடிக்கையாளருக்கு அனுப்பிவைத்துள்ள செய்தியில் நிலமையினை சரிசெய்ய  இன்னும் ஒருவாரம் எடுக்கும் என தெரிவித்துள்ளது

இலங்கையில் தற்போது  Paypal  ஊடாக பணம் பெறும் வசதி இல்லை என்பதும்  BizPay , PayhereWebxPay  ஆகிய நிறுவனங்களே ஓரளவு குறைந்த கட்டணத்துடனான Payment Gateway வசதிகளை வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது  குறிப்பிடத்தக்கது.

Advertisement