தொழில்நுட்பத்தில் தமிழ் – கருத்தரங்கம்

வடக்கு  தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தொழில்நுட்ப உரையாடல் (Tech Talk) ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  வடக்கு  தகவல் தொழில்நுட்ப சம்மேளனம் (NCIT) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

வடக்கு மாகாணத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை சார் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனம் கடந்த ஆண்டு பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு செயற்பாடுகளை உறுப்பினர்களுக்காகவும் மாணவர்கள் பொதுமக்களுக்காகவும் செய்து வருகின்றது.

அந்தவகையில் நாம் மொபைல் சாதனங்களில் தமிழில் தட்டச்சு செய்ய பயன்படுத்தும் செல்லினம் மென்பொருளையும் மற்றும் முரசு அஞ்சல் மென்பொருளையும் அப்பிள் நிறுவனத்தயாரிப்புக்களில் உள்ள தமிழ் விசைப்பலகை மென்பொருளையும் வடிவமைத்த மலேசியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப வல்லுனரும் முரசு நிறுவனத்தின் நிறுவுனருமான முத்துநெடுமாறன் அவர்களை முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்து  ஒரு இலவச தொழில்நுட்ப செயலமர்வினை 27.02.2017  திங்கட்கிழமை மாலை 2 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை யாழ் பொதுநுாலக கேட்போர் கூடத்தில் நடாத்தவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

தகவல் தொழில் நுட்ப சாதனங்களில் தமிழ் என்பது தொடர்பிலும் தொழில் நுட்பத்தில் தமிழ் சார்ந்த தொழில்முயற்சியான்மை அனுபவங்களையும் அவர் பகிர்ந்து பங்கேற்பாளர்களின் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளுக்கு விடைதர உள்ளார்

இந்நிகழ்வினால் மாணவர்கள் பொதுமக்கள் ஏனைய தொழிற்துறைசார்ந்த சகலரும் பயன்பெற முடியும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான இலவச  முன்பதிவுகளை கீழ்வரும் இணைப்பில் செய்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது

முன்பதிவு படிவம்:  goo.gl/ydrUa0

முகப்புத்தகத்தில்..
https://www.facebook.com/events/1854272251516369/

Advertisement