தகவல் தொழில்நுட்ப சிறிய நடுத்தர மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் கண்காட்சி

வடக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின்(NCIT) ஏற்பாட்டில் ICTA யின் வடக்கு மாகாணத்தின் சிறிய நடுத்தர வணிக நிறுவனங்களை இலத்திரனியல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் வர்த்தகத்தொழிற்துறை மன்றத்தின் (CCIY) அனுசரணையுடன் மேற்படி கண்காட்சி நிகழ்வு எதிர்வரும் மே 31ம் திகதி காலை 9 மணி தொடக்கம் 4 மணிவரை யாழ் வலம்புரி விருந்தினர் விடுதியில் நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் விசேட அழைப்பில் வடக்கு மாகாணத்தின் சிறிய நடுத்தர தொழிற்துறைகளினை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வர். கண்காட்சியுடன் தொழிற்துறை நிறுவனங்களுக்காக நிறுவனங்களில் சேவைகள் பொருட்களில் தகவல் தொழில்நுட்பத்தீர்வுகளை புகுத்துவதன் அவசியம் குறித்த விசேட கருத்தரங்கு செயலமர்வும் இடம்பெற உள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வன்பொருள் (Hardware) மற்றும் கல்வி (Education) தவிர்ந்த தகவல் தொழில்நுட்ப துறைசார் மென்பொருள் (Software) இலத்திரனியல் சந்தைப்படுத்தல் (Digital Marketing) இணையத்துறை (Website Online /Application/ Mobile Apps) மற்றும் விசேட தீர்வுகளை (Special Technology) வழங்கும் நிறுவனங்கள் தமது பொருட்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காட்சியறைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் தகவல் தொழில்நுட்ப தீர்வுகள் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பங்களை www.ncit.lk இணையத்தளத்தில் இதற்காக உள்ள பிரத்தியேக விண்ணப்ப படிவம் ஊடாக இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க வேண்டப்படுகின்றனர். உள்நுழைவு தகுதிகள் தேர்தெடுக்கப்படும் முறைகள் போன்ற தகவல்கள் இணையத்தளத்தில் உள்ளது.

விண்ணப்ப முடிவுத்திகதி 20.05.2017.காட்சியறைகளுக்காக தெரிவுகள் ICTA யினால் இறுதி செய்யப்படும். மேலதிக தகவல்களுக்கு: தவரூபன் (0777 563213 ) சர்மிக் (0777 563213)

Advertisement