கையடக்க சாதனங்களில் இணையப்பாவனையானது 51.3 வீதமாக அதிகரித்துள்ளது.

வரலாற்றில் முதற்தடவையாக  உலகளாவிய ரீதியில் கையடக்க சாதனங்களில் இணையப்பாவனையானது கணினி மூலமான இணையப்பாவைனையினை விட அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இணையக்கண்காணிப்பு நிறுவனமான StatCounter வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

internet_usage_2009_2016_ww

51.3 வீதம் கையடக்க சாதனங்களிலும் 48.7 வீதம் கணினிகளிலும் இணையப்பாவனை உள்ளதாக மேற்குறித்த ஆய்வு கூறுகின்றது.இந்நிறுவனத்தினால் 2009 ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இம்முறையே முதற்தடவையாக இந்த முடிவு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கையடக்க சாதனங்கள் மூலமான முன்னகர்வுகளை இதுவரை   செயற்படுத்தாதிருக்கின்ற நிறுவனங்கள் தம்மை மீள்பரிசீலனை செய்யவேண்டியதன் அவசியத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
தமது இணையத்தளங்களை , தமது சேவைகளையும் செயற்பாடுகளையும் கையடக்கசாதனங்களுக்கேற்றவகையில் மாற்றியமைக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.

கடந்த மே யில் கூகிள் நிறுவனம் இணையத்தேடுதல் நடவடிக்கையானது கணியில் இருந்தானதைவிட கையடக்க சாதனங்களில் இருந்தானதே அதிகம் என தெரிவித்திருந்தது.

செய்தி மூலம் Techcrunch

Advertisement