கூகுள் வழங்கும் குறைந்த விலையிலான விமானப் பயணம் !

நமது பயணங்களுக்கான விமானங்களை தேடுவதற்கான Google Flights சேவையை அறிமுகம் செய்த கூகுள், தற்போது அதில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தி உள்ளது.  சரியான விலையில் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாததுதான் விடுமுறையில் விமானப் பயணம் செய்யும் 69 சதவீதம் அமெரிக்கர்களின் கவலை. அதற்கு   காரணம் சரியான திட்டமிடல் இல்லாததால், விலை அதிகமான விமான பயணச்சீட்டுகளையே பதிவு செய்கிறார்களாம்.

இதேபோல பயணங்களுக்காக விமானப் பயணத்தை தேர்வு செய்யும் பெரும்பாலோனோரின் கவலை, அதிக விலைதான். அதற்கு கைகொடுக்க இருக்கிறது கூகுளின் GoogleFlights சேவை. நீங்கள் பயணம் செய்யும் நாள், செல்ல வேண்டிய இடம், தேர்வு செய்யும் விமான நிறுவனம் ஆகியவற்றை மட்டும் இதன் வசம் ஒப்படைத்தால் போதும். நீங்கள் இதனைப் பதிவு செய்தது முதல், தினந்தோறும் உங்களுக்கு விமானக் கட்டணத்தில் ஏற்படும் மாறுதல்களை தெரிவித்துக் கொண்டே இருக்கும் கூகுள். இதனால் குறைந்த விலைக்கு நம்மால், விமான பயணச்சீட்டு பதிவு செய்ய முடியும்.

இந்த சேவையின் மூலம், எளிதாக விடுதிகள், விமானம் ஆகியவை பதிவு செய்யவும், பதட்டம்  இன்றி பயணம் செய்யவும் முடியும். . இதனை தினமும் பின்தொடர்வதன் மூலமாக உங்கள் விமானப் பயணத்தை மிகக் குறைந்த விலையில், சரியான நேரத்துக்கு பதிவு  செய்ய முடியும். நீங்கள் செல்ல வேண்டிய விமானத்தின் பயணச்சீடடு விலை, விரைவில் அதிகமாக இருக்கிறது என்றால் அதனை உங்களுக்கு முன்கூட்டியே சொல்லும். உடனே நீங்கள் பயணச்சீட்டு  முன்பதிவு செய்வதன் மூலமாக, கூடுதல் கட்டணத்தில் இருந்து தப்பிக்கலாம்.

குறிப்பிட்ட விமானத்தைக் குறிப்பிடாவிட்டால் கூட பரவாயில்லை. நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை, உதாரணமாக கொழும்பு – சிங்கப்பூர் எனக் கொடுத்துவிட்டால் போதும். அந்தப் பயணத்தடத்தில் இருக்கும் எல்லா விமானங்களின் கட்டணங்கள், நேரங்கள் போன்ற விடயங்களையும் தெரியப்படுத்தும். இதன் மூலம் நமது நேரமும், பணமும் மிச்சமாகும். இந்த சேவை விரைவில் வரவிருக்கிறது.

மேலும் விபரங்கள் http://www.google.com/flights/

Advertisement